முகநூல் பதிவால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 2 பேர் பலி காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அடித்து நொறுக்கியதால் 144 தடை உத்தரவு!

0
62

முகநூல் பதிவிட்டதன் பேரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் பெங்களூரில் இரண்டு பேர் பலியாகி, எம்எல்ஏவின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு 144 தடைச் சட்டம் உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு பகுதியில் உள்ள புலிகேசி நகரில் இந்தச் சம்பவம் நடந்தேறி உள்ளது.

 

2 killed in violence over Facebook post 144 restraining order as Congress MLA smashes house
2 killed in violence over Facebook post, 144 restraining order as Congress MLA smashes house!

இந்த சம்பவத்தின் பின்னணியாக இருப்பது ஒரு முகநூல் பதிவு தான். காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன்(23 வயது) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக சித்தரித்த பதிவினை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அது ஒரு மதத்தினை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு ஆத்திரத்தில் வந்த கும்பல் ஒன்று புலிகேசி நகரிலுள்ள எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை சேதப்படுத்தினர். பின்பு அவரின் வீட்டின் மீது கற்களை வீசி கண்ணாடிகளையும், ஜன்னல் மற்றும் கதவுகளையும் அடித்து நொறுக்கினர்.

2 killed in violence over Facebook post 144 restraining order as Congress MLA smashes house
2 killed in violence over Facebook post, 144 restraining order as Congress MLA smashes house!

 

இதன்பிறகு வீட்டிலிருந்து எம்எல்ஏ வும், நவீனும் காவல்நிலையத்துக்கு தப்பி ஓடியதால், அங்குள்ள போலீஸார் உங்களது பிரச்சனையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என அவர்கள் ஆத்திரமாக கூறியதாக தெரியவருகிறது.

இதற்கு முன்பே, சத்பாவனா இளைஞர் சமூக நல அமைப்பும், பிலால் மற்றும் பிற மசூதியை சேர்ந்தவர்கள் ஒன்றாக காவல் நிலையத்தில் எம்எல்ஏ மற்றும் நவீனுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கட்டுக்கடங்காத கடும் வன்முறைச் சம்பவத்தை தடுக்க முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையாவிடம் பேசியுள்ளார்.

உள்துறை அமைச்சரின் உத்தரவின் பெயரில் வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்துமாறு மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு கொடுத்தார்.

அதன்பிறகு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது முதலில் போலீஸார் தடியடி நடத்தினர், பின்பு கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்த முயன்றனர். இதன் பிறகே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

2 killed in violence over Facebook post 144 restraining order as Congress MLA smashes house
2 killed in violence over Facebook post, 144 restraining order as Congress MLA smashes house!

இந்த வன்முறைச் சம்பவத்தால், 2 பேர் பலியாகினர், அதில் 12 பேர் காயமடைந்தனர். மேலும், தடுக்க முயன்ற போலீசார் தரப்பில் 60 பேர் காயமடைந்ததாக என்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பிறகு அங்கு டிஜே ஹள்ளி, கேஜி ஹள்ளி ஆகிய இரு இடங்களுக்கும் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிறகு இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி பேசியதாவது, “யாரோ ஒருவர் செய்த தவறுக்கு நாம் வீணாக சண்டையிட வேண்டாம். என்ன இருந்தாலும் நாம் சகோதரர்கள். யார் என்ன தவறு செய்திருந்தாலும் சட்டத்தின்படி பாடம் புகட்ட தண்டனை கிடைக்க வேண்டும். முஸ்லிம் சகோதரர்களே நாங்களும் உங்கள் பக்கம் தான் இருக்கிறோம். சகோதரர்கள் அமைதி காக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்

author avatar
Parthipan K