ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !

0
65

விவசாயிகளுக்கு வேளாண் துறையில் உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சரை 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவித் திட்டத்திற்கு ஒப்பதல் வழங்கியது.

இந்நிலையில் இத்திட்டத்தை இன்று காலை 11 மணி அளவில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்,கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் வீடியோ காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர தோமர் கலந்து கொள்கிறார்.

பிரதம மந்திரியின் விவசாய நலத்திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 6 வது தவணையாக 17 ஆயிரம் கோடி ரூபாயை இன்று ஒதுக்குகிறார்.இத்திட்டத்திற்காக நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில்,11 பொதுத்துறை வங்கிகள் விவசாயிகள் நலத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இத்திட்டம்,அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள், செயலாக்க அலகுகள் போன்ற சமூக விவசாய சொத்துக்களை உருவாக்குவதற்கு இந்த நிதி ஊக்கமளிக்கும். மேலும்,விவசாயிகள் தங்கள் பொருட்களை அதிக அளவில் சேமித்து வைப்பதன் மூலம் பொருட்கள் வீணாவதைக் குறைக்கவும், செயலாக்கம் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும்.

author avatar
Parthipan K