சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

0
133
#image_title
சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையம் 193 சின்னங்கள் அடங்கிய புதுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்கள் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தங்களது சின்னங்களில் போட்டியிடும். அதே சமயம் தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்வகளும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் ஆணையம் வெளியிடும் சின்னத்தை தேர்வு செய்து அந்த சின்னத்தில் தான் இவர்கள் போட்டியிட வேண்டும்.
அந்த வகையில் சுயேட்சச்சையாக போட்டியிடுபவர்களுக்கும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் போட்டியிடுபவர்களுக்கும் சின்னங்களை தேர்வு செய்ய 193 சின்னங்கள் அடங்கிய புதிய பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த 193 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் கைத்தடி, ஏர் கண்டீஷனர், பலூன், வளையல்கள், விசிறி, ஜன்னல்கள், ஊசி, வயலின், தர்பூசணி உள்பட பல வகையான சின்னங்கள் இந்த புதிய பட்டியலில் உள்ளது.
அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு வரும் அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 2023ம் ஆண்டின் இறுதியிலும் 2024ம் ஆண்டின் தொடக்கத்திலும் வடகிழக்கு மாநிலங்களான சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த லோக் சபா தேர்தலுடன் சேர்த்து அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் நடத்தப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது.