ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?

0
80

ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?

தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில நோய் தொற்றுகள் புதிதாக ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்  அனைத்து பள்ளிகளிலும் முககவசம் கட்டாயமாகப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் முக கவசம் அணியாவிட்டாலும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க விட்டால் குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் எனவும் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஒரு சில தனியார் பள்ளி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை சுழற்சி முறையில் மாற்றலாம் எனவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாம் எனவும் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு இருந்து வந்தது.

மேலும் இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த முடிவில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 170 மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 9 மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால் அப்பள்ளியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பதாக தொடர்பாக பள்ளி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசத்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தொற்றால் பாதிப்பு அடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K