பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பாடகர் படுகொலை! ஆளும் கட்சிக்கு தொடர்பு?

0
144

ஹிந்தி பாடகரான சித்து கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கு கடந்த பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் மான்சா மாவட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனாலும் அவர் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.

அவருக்கு 29 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த 29ம் தேதி பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

அவருடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 30க்கும் மேற்பட்ட முறை அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாகியிருக்கிறது. இதற்கு நடுவே சித்து கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பது ஆம் ஆத்மி கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், சித்து வாலாவின் உடலில் 19 தோட்டாக்கள் பாய்ந்திருந்தது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் சுடப்பட்ட 15 நிமிடங்களில் அவர் பலியாகிவிட்டார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

அவரது உடலின் வலது பக்கத்தில் அதிகமான குண்டுகள் துளைத்த காயங்கள் இருந்ததாகவும், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் மற்றும் முதுகெலும்பு உள்ளிட்டவற்றில் தோட்டாக்கள் பாய்ந்திருப்பது அந்த அறிக்கையின் மூலமாக தெரிய வந்திருக்கிறது.

சித்து வாலாவின் உடைகள் முற்றிலுமாக ரத்தத்தில் நனைந்து காணப்பட்டதாகவும், அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவருடைய கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கும்பல் பொறுப்பேற்றிருக்கிறது. அதேபோல கனடா நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோல்டி ப்ரார் என்ற கும்பலும், அவருடைய கொலைக்கு பொறுப்பேற்று இருக்கிறது.

ஒரு சினிமா பாடகராக இருந்து அரசியலில் நுழைந்த இவர் திடீரென்று எதற்காக இப்படி ஒரு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட வேண்டும். இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பாக பஞ்சாப் மாநில காவல்துறை அதிரடியாக விசாரணையை தொடங்கியிருக்கிறது .

அதோடு ஒருவேளை இவருடைய முறையில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய ஆம் ஆத்மி கட்சிக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

ஏனெனில் அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக தற்போது தான் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. ஒருவேளை சிந்துவை விட்டுவைத்தால் காங்கிரஸ் கட்சி அங்கு மேலும் வளர்ச்சி பெற்று விடும் மீண்டும் நாம் ஆட்சிக்கு வரமுடியாது என்ற பயத்தில் அந்த கட்சி இப்படி ஏதாவது செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது.