தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!!

0
284
15000 crore investment in Tamil Nadu!! Famous car company announcement!!
15000 crore investment in Tamil Nadu!! Famous car company announcement!!
தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!!
தமிழ் நாட்டில் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக பிரபல கார் நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை முதல்வர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்கொரிய நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் உலகத்தில் இருக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பலவிதமான வசதிகளைக் கொண்டு புது புது கார்களை தயார் செய்து உலகிற்கு விற்பனைக்கு கொடுத்து வரும் ஹூண்டாய் நிறுவனம் தமிழ் நாட்டில் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
அடுத்து வரும் 7 ஆண்டுகளில் பல்வேறு விதமான வசதிகளை கொண்ட எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவும், அதற்கான கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த முதலீடு இருக்கும் என்று அறிவித்துள்ளது.  தமிழ் நாட்டில் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை அதாவது மே 11ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளது.