அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏற்பட்ட கலவரம்! 144 தடை உத்தரவு?

0
106

சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அந்த கதவை உடைத்தனர்.

இதன் காரணமாக, அங்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினரிடையே மோதல் உண்டானது. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அதோடு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவின் தலைமை அலுவலகம் அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஆகவே அவர்கள் கல்விச்சில் ஈடுபட்டார்கள் இதனால் அங்கே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இரு தரப்பினரும் எதிரெதிரே நின்று கொண்டு கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். மேலும் அப்படி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது அவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கல்வீச்சு தாக்குதலுக்குப் பிறகு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் கீழ் அதிமுகவின் தலைமை அலுவலகம் வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆகவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரை விரட்டியடித்திருக்கிறார்கள். ஆகவே அந்தப் பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.

இதற்கிடையில் வன்முறையில் ஈடுபட்ட அதிமுகவின் தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படங்கள் கிழித்து தீ வைத்து எரிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

அதோடு அதிமுக தலைமை அலுவலக பகுதியில் வாகனங்கள் உடைக்கப்பட்டது குறித்து 15 அதிமுக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் அருகிலிருக்கின்ற திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். காயமடைந்த அதிமுகவைச் சார்ந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு அமைதியான முறையில் நடைபெற வேண்டிய இந்த பொதுக்குழு கூட்டம் காரணமாக, தற்போது அதிமுக அலுவலகம் அமைந்திருக்கின்ற ராயப்பேட்டையில் பெரும் காலவரமூண்டிருப்பதால் காவல்துறையினர் இந்த பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.