மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து!

0
63

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து!

பாஜகவில் இருக்கும் தகவல் தொடர்பாளர் நுகர் சர்மா என்பவர் தொலைக்காட்சியில் நடைபெற்ற வாக்குவாதத்தில் முகமது நபிகள் குறித்து தவறான முறையில் சித்தரித்து பேசினார். இந்த உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.இவர் பேசியதை தொடர்ந்து சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் இவர் பேசியதற்கு ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே போலத்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் தையல்காரர் ஒருவர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து தனது கருத்துக்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு பலரும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இவரது கடைக்கு துணி தைப்பது போல் இரண்டு வாலிபர்கள் சென்றுள்ளனர். அதில் ஒருவர் இவரை அளவை எடுக்கும்படி கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு டைலரிங் தலையை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனை அந்த வாலிபருடன் உடன் வந்தவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இவர்கள் பதிவிட்டுள்ள வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்வதாக கூறியுள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் என்பதால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல் படுத்தி உள்ளனர்.

மேலும் இன்டர்நெட் மற்றும் நெட்வொர்க் சேவையையும் ரத்து செய்துள்ளனர். இந்த இரண்டு கட்டுப்பாடுகளும் ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த கொலையாளிகளான ரியாஸ் அக்தர்,கோஸ் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இவ்வாறு கொலை செய்த வீடியோவை இணையத்தில் பதிவு விடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அவர்களைப் போல இவர்கள் செய்துள்ளதால் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்களோ என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேற்கொண்ட விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.