2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு

0
115

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தென்மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல தமிழகத்தில் சில தென் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை தின கொண்டாட்டங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை உள்ளிட்ட இரண்டு நிகழ்ச்சியும் தென் மாவட்டங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளின் போது மோசமான கலவரம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடைமுறையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 144 தடை உத்தரவு இன்று இரவு முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரைக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர்த்து வெளி மாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியல் பிறப்பித்துள்ள இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.