ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு!

0
80
Another Jaybeam to host in Salem! Chief's Action Order!
Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு!

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடந்து வருகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை நாளடைவில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சென்ற மாதம் கூட திவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இவர்களை சும்மா விடக்கூடாது என்று இறப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கு அதிக விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் அது அமைந்தது. அதனையடுத்து தற்பொழுது சேலத்தில் ஜலகண்டாபுரம் அருகே 14 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி வசிக்கும் தெருவிலேயே 25 வயது மிக்க மூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இவர் வெகு நாட்களாக 14 வயது சிறுமியை பின் தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். சிறுமியும் மூர்த்தி கூறிய ஆசை வார்த்தையை நம்பி அங்கு உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்யும் அளவிற்கு முன்வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு மூர்த்தி அச்சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதனையடுத்து சில காலமாக அச்சிறுமி வயிற்று வலியால் அவதிபட்டு வந்துள்ளார். வயிற்றுவலி காரணமாக அச்சிறுமியை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பம் அடைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். அதனையடுத்து அச்சிறுமி நிலையை கண்டு அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புகார் அளித்ததன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் துர்கா தேவி விசாரணை நடத்தினார். விசாரணையில் மூர்த்தி என்பவர் அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டதும் மற்றும் அச்சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அதனையடுத்து மூர்த்தியின் மேல் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் அவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.