அமைச்சர்களாக 14 பயங்கரவாதிகள் : ஆப்கனின் பரிதாப நிலை!

0
87

ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள முல்லா
முகமது ஹஸன் அகுந்த் மற்றும் இரண்டு துணைபிரதமர்கள் உட்பட 14 பேர் ஐ.நா. பாதுகாப்பு
கவுன்சிலின் பயங்கரவாத கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய
பின்னர் இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது அனைத்து பிரிவினரையும்
உள்ளடக்கிய அரசாக இல்லாமல் தலிபான்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அரசாக உள்ளது.
இதில் பெண்களுக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை. இதில் தற்காலிக பிரதமராக முல்லா
முகமது ஹஸன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக துணைபிரதமர்களாக முல்லா
அப்துல் கனி பராதர் மற்றும் மவுல்வி அப்துல் சலாம் ஹனாபி ஆகியோர்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 33 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையில் பிரதமர் துணைபிரதமர்கள்
அமைச்சர்கள் உட்பட 14 பேர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத கருப்பு பட்டியலில்
இடம் பெற்றுள்ளனர்.

தற்காலிக உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச பயங்கரவாதி சிராஜுதின் ஹக்கானி தலைக்கு அமெரிக்க அரசு 75 கோடி ரூபாய் பரிசு தொகையை ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த 2008ல் காபூல் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் இவருக்கு தொடர்பு உள்ளது.

இவரது உறவினரும் ஹக்கானி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவருமான கலீல் ஹக்கானி
அகதிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இடைக்கால ராணுவ அமைச்சர்
வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருமே ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்டவர்கள்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தலையீட்டை அடுத்து ஹக்கானி பயங்கரவாத
அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Parthipan K