பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள்!

0
63

சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதாவது தமிழகத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி வருவதால் தமிழகத்தில் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன. அந்த விதத்தில் மே மாதம் நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும். ஒத்திவைக்குமாறும், பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன. இதன்படி அதற்கான ஆலோசனைகள் நேற்றைய தினம் நடைபெற்றது.

அதனடிப்படையில், செய்முறைத்தேர்வு இல்லாத பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்விற்கு படிப்பதற்கான விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வைரஸ் பரவல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு தவிர மற்ற எல்லா வகுப்புகளுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

12 ஆம் வகுப்பிற்கு மட்டும் மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மட்டும் மே மாதம் 31ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி எல்லா தேர்வுகளிலும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஆரம்பமானது. அவர்களின் செய்முறை தேர்வு இல்லாத மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. செய்முறைத்தேர்வு உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதோடு, அவர்களுக்கு செய்முறைத்தேர்வு முடியும் அடுத்த தினத்திலிருந்து படிப்பதற்கான விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்திருக்கிறார். எல்லா மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டு வழங்கும் அன்று வரவழைத்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி நுழைவு சீட்டு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.