நெல்லை காவல் சரகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 126 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது-டிஐஜி பிரவேஷ்குமார்!!

0
209
#image_title

நெல்லை காவல் சரகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 126 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது-டிஐஜி பிரவேஷ்குமார்!!

நெல்லை காவல் சரகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 126 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் தொடர்புடைய 120 வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை காவல் சரகத்தின் துணைத் தலைவர் பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரவுடிகள் மற்றும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்தும் விதமாக நெல்லை சரகத்தில், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் இன்றைய தேதி வரை எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் 126 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நெல்லை மாவட்டத்தில் 36 நபர்களும், தென்காசி மாவட்டத்தில் 20 நபர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 53 நபர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 நபர்களும் அடங்குவர்.

மேலும் இந்த ஆண்டு இதுவரை குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பல்வேறு குற்றங்கள் ஈடுபட்ட 779 நபர்களை நிர்வாக நீதிபதி முன் ஆஜர் படுத்தி நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் நெல்லை காவல் சரகத்தில் 106 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 233 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் 120 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை நெல்லை காவல் சரகத்தில் 46 குற்ற வழக்குகள் புலன் விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் திருடப்பட்ட பொருட்கள் 55% மீட்கப்பட்டுள்ளது.

நெல்லை சரகத்தில் நடப்பாண்டில் இதுவரை இரண்டு ஆதாயக் கொலைகளும் 2 கூட்டுக் கொள்ளை சம்பவமும் 37 வழிப்பறி சம்பவமும் 56 வீட்டை உடைத்து திருடிய குற்றமும் நடைபெற்றுள்ளது.

மேலும் 136 பெரிய அளவிலான திருட்டு வழக்குகளும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 59 சதவீதம் குற்ற வழக்குகள் புலன் விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 54 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக டிஐஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Savitha