பித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள்! நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்!

0
73

ஒவ்வொருவரும் வாழ்வில் பல பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்து வருகிறோம். ஆனால் எதற்கு எடுத்தாலும் மருத்துவரை அணுக ஓடுகிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மருத்துவரை சென்று பார்த்தர்களா? இல்லை மாத்திரைகளை தான் எடுத்து கொண்டார்களா? இல்லை தானே! ஆம் இயற்கை வைத்தியம் பல உள்ளன். ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. பித்தம் குறைய, ஆயுள் பெருக, இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் குறையும். ஆயுள் பெருகும்.

2. பித்ததினால் வரும் மயக்கத்தை போக்க இஞ்சி சாறு, வெங்காய சாறு இரண்டையும் தேன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் மயக்கம் தெளியும்.

3. பழுத்த மாம்பழத்தை எடுத்து சாறு எடுத்து லேசாக சூடேற்றி ஆற வைத்து பின் சாப்பிட்டால் பித்தம் குறையும்.

4. எலுமிச்சை பழத்தை பிழிந்து சாதம் செய்து வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டு வர பித்தம் தணிக்கும்.

5. ரோஜா பூவை கஷாயம் வைத்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர பித்த நீர் மலம் வழியே வெளியேறிவிடும்.

6. பொன்னாவரை வேர், சுக்கு, சீரகம், மிளகு ஆகியவை சேர்த்து கஷாயம் போட்டு குடித்து வந்தால் பித்தபாண்டு தீரும்.

7. விளாம்பழம் கிடைத்தால் தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

8. நீங்கள் சாப்பிடும் உணவில் தினமும் அகத்திக்கீரை சேர்த்து கொண்டால் பித்தம் குறையும்.

9. பணகிழங்கு கிடைத்தால் சாப்பிடுங்கள் பித்தம் குறையும்.

10. எலுமிச்சை இலையை மோரில் கலந்து ஊற வைத்து அதை உங்கள் உணவில் தினமும் சேர்த்து பயன்படுத்தி வர பித்தம் தணிக்கும்.

11. அரசமர குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி அந்த தண்ணீரை ஆற வைத்து , அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

எந்த குறிப்பு உங்களால் செய்ய முடியுமோ அதை குறிப்பை பயன்படுத்தி பித்தத்தை தனித்து கொள்ளுங்கள்.

author avatar
Kowsalya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here