10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

0
206
10th and 12th class students identity theft! Audio going viral on the internet!
10th and 12th class students identity theft! Audio going viral on the internet!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் சுயவிவரத்தை சேகரித்து வைத்திருப்பது வழக்கம் தான். இந்நிலையில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக வெளியானது. அந்த ஆடியோ உரையாடலில் இருவர் பேசியுள்ளனர். அவர்கள் கல்லூரி ஒன்றில் இருந்து நபர் ஒருவர் தரகர் ஒருவரிடம் பேசுவதாக அந்த ஆடியோ உள்ளது.

மேலும் அதில் தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் பத்தாவது மற்றும் 12வது மாணவர்களின் முகவரி அவர்களுடைய தொடர்பு கொள்ளும் செல்போன்  போன்ற சுய விவரங்கள் தேவை என்றும் கல்லூரியில் இருந்து பேசுபவர்கள் கூறுகின்றார்கள். 20 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை தேவை என்று அந்த நபர் கூறுகிறார்.

அதற்கு பதில் அளிக்கும் தரகர் பத்தாவது படிக்கும் மாணவர்களின் தகவலுக்கு ஒரு மாவட்டத்திற்கு 3000 தரவேண்டும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தகவலுக்கு ஒரு மாவட்டத்திற்கு ஒரு 5000 தர வேண்டும் இந்த பணத்தை ஆன்லைனில் அனுப்பி வைத்தால் அடுத்த பத்தாவது நிமிடம் மாணவர்களின் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் என கூறியுள்ளதாக ஆடியோ உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்கும் மாணவர்களின் சுய தகவல்கள் திருடப்பட்டு  விற்பனை செய்யப்படுவது போன்று அந்த ஆடியோ வெளியாகியிருக்கின்றது. பள்ளி கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரி புண்ணியகோடி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்ற பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சைபர் கிரைம் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கம்ப்யூட்டர் பிரிவு ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரணையை தொடங்க உள்ளனர்.

விரைவில் ஆடியோ உரையாடலில் பேசும் தரகர் யார் என்பதை கண்டுபிடித்து விடுவோம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களை சுயவிவரங்களை விலை கொடுத்து வாங்கி அதில் உள்ள தகவலின் அடிப்படையில் மாணவர்களை தொடர்பு கொண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு அழைக்கவும் மேலும்  கல்லூரியில் சேர அழைப்பதற்கும் திருட்டுத்தனமாக பயன்படுத்தப்படுகிறார்கள் இந்த விவகாரத்தில் சிக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K