109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி! 

0
238
#image_title

109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி! 

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். ஆனால் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுப்மன் கில் 21 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த புஜாரா 1 ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து சற்று நிலைத்தாடிய விராட் கோலி 22 ரன்களும், அஸ்வின் 3 ரன்களும் எடுத்து வெளியேறினர். இவர்களுக்குப் பின் வந்த உமேஷ் யாதவ் 17 ரன்ளும் முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவரில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.

ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆனதால் ஆஸ்திரேலிய அணி தனது  முதல் இன்னிங்ஸ் தொடங்கி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.