இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்

0
65

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்

 

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதியளித்துள்ளார்.

 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது.குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.அந்த வகையில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியது.

 

பலரும் எதிர்பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து எந்தவொரு முறையான அறிவிப்பும் வெளியாகவில்லை.அந்த வகையில் திமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெண்களுக்கு உதவித் தொகை எப்போது வழங்கப்படும் என்ற தகவலை தெரிவித்தார்.

 

கருணாநிதி அவர்களின் 89 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வேருக்கு விழா என்ற பெயரில் நடைபெற்ற இல்லற இணைய விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.

 

அதாவது பெண்களின் திருமண வயதை உயர்த்தியவர் பெரியார் என்றும்,தற்போது ஒவ்வொரு பெண்ணும் படிக்க மாதம் 1000 ரூபாய் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்” என்றும், சுட்டிக்காட்டி பேசினார்.

 

குறிப்பாக, பெண்கள் படிப்பு முடித்து யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டு பேசினார். அடுத்ததாக குடும்ப தலைவிகளுக்கான உதவித் தொகை குறித்து பேசிய அவர் அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டு முறையில் பெரிய குளறுபடி ஏற்பட்டு உள்ளது என்றும்,அதனை சரிசெய்யும் பணி தற்போது நடைபெறுகிறது என்றும் கூறினார்.

 

இந்த பணிகள் முடிந்து கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பின்னர் அண்ணா அல்லது கலைஞர் பிறந்தநாளில் இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும், அவர் அப்போது உறுதிப்படத் தெரிவித்தார்.

 

இதனால், மிக விரைவிலேயே இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.