ஈரோடு மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு:? வியாபாரிகள் கதறல்?

0
58

ஈரோடு மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரையில் நடைபெறும் ஜவுளி சந்தையானது உலகப்புகழ் பெற்றதாகும்.இந்த ஜவுளி சந்தையில் காலநிலைக்கு ஏற்ப துணிகள் விற்கப்படும். கோடைக் காலங்களில் காட்டன் துணிகள் சேலைகள் கைக்குட்டைகள் போன்றவை அதிக அளவில் விற்கப்படும்.குளிர்காலங்களில் சுவட்டர் இதுபோன்ற துணிகள் அதிக விலையில் விற்கப்படும்.

அதிகப்படியான துணிகள் ஒரே இடத்தில் விற்கப்படுவதால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களிலுள்ள வணிகர்களும் ஈரோட்டில் உள்ள இந்த ஜவுளி சந்தையில் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வர்.இந்த ஜவுளி சந்தையை பொருத்தவரையில் ஒட்டுமொத்தமாக ஒருநாள் விற்பனையே 1 to 2 கோடியாக இருக்கும்.ஏதேனும் பண்டிகை நாட்களாக இருப்பின் சுமார் 4 லிருந்து 5 கோடி முதலீட்டை ஈட்டுவார்கள்.

ஆனால் தற்போது கொரோனாத் தொற்றுக் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வணிகர்கள் வர முடியாததால் ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.இதுமட்டுமின்றி மக்களும் தொற்றின் அச்சம் காரணமாக ஜவுளி சந்தைக்கு வராததால் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் விற்பனை எதுவுமின்றி சுமார் 100 கோடி அளவிற்கு நட்டம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

author avatar
Pavithra