உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு! கதறும் விசிகவினர்

0
87

உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு! கதறும் விஸிகவினர்

மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக இந்த சட்டத்தை கொண்டு வந்தது.

இது பெருன்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது இதனை எடுத்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர் எஸ் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித், நீதிபதிகள் எஸ் ரவீந்திரபட், தினேஷ் மகேஷ்வரி, எஸ் பி பார்த்திவாலா மற்றும் பெல்லா திரிவேதி உள்ளிட்ட 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி வெள்ளத் திரிவீதி உள்ளிட்டோர் தீர்ப்பு வழங்கினர் அதே சமயத்தில் இட ஒதுக்கீடு சட்டவிரோதம் என்று நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கினார். இறுதியாக 5 பேர் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் பொருளாதார ரீதியாக 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், நீதிபதி லலித் மற்றும் ரவீந்திர பட் உள்ளிட்டோர் எதிராகவும் தீர்ப்பு வழங்கினர்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்ததாவது, வழக்கு விசாரணை நடைபெற்ற போது எங்கள் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதங்களை நீதிபதிகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வைத்துத்தான் இந்த தீர்ப்பு வரும் என்பதை முன்பே நாங்கள் தீர்மானித்து இருந்தோம். குறிப்பாக மூத்த வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பட்டியல் இனத்தவர்களுக்கோ, பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ இட ஒதுக்கீடு வழங்குவதில் உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தன்களை விதித்திருக்கிறது. பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு 10 வருடங்கள் தான் நீடிக்கும் என்பதை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நீடித்து சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. அத்தகைய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற உத்தரவாதம் செய்வதற்காக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது போன்ற எந்த விதமான நிபந்தனையும் விதிக்கப்படவில்லை .இது முற்றிலுமாக சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பானது. இது நீதி அல்ல, அப்பட்டமான அநீதி இதனை எதிர்த்து விரிவான அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் ஆளும் கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு திமுகவின் கூட்டணி கட்சிகளும் எப்போதுமே உயர்சாதியினருக்கு விரோதமாக தான் செயல்பட்டு வருகிறார்கள் என்பது பல நேரங்களில் பல சமயங்களில் பொதுமக்களுக்கு நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் அதனை பொதுமக்கள் தான் இன்னும் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அப்படி பொதுமக்கள் உணர்ந்து இருந்தால் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற இரு கட்சிகள் தமிழகத்திலேயே இருந்திருப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்காது.

அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி உயர்சாதி வகுப்பினருக்கு இந்த இரு கட்சிகளும் எப்போதுமே அநீதிகளைத்தான் இழைத்து வந்திருக்கின்றன அது பல சமயங்களில் வெளிக்கொண்டுவரப்பட்டாலும் அதனை பொதுமக்கள் சரியாக உணர்வதில்லை அதோடு தமிழகத்தில் உயர் சாதி வகுப்பினரிடையே இருக்கும் ஒற்றுமையின்மையை இந்த இரு கட்சிகளும் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலை நிறுத்திக் கொண்டு வருகிறார்கள்.

இப்படி தாழ்த்தப்பட்டோர் இனம் பட்டியலினம் என்று சொல்லிக் கொண்டு மக்களிடையேயும், அரசாங்கத்திடமும் அனுதாபத்தை பெற்று அதன் மூலமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு சிலர் உயர் சாதி மற்றும் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொண்டு உயர்சாதியினரை முன்னரேவிடாமல் தடுக்கும் அவரம் எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?

உயர் சாதி என்று சொல்லப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருப்பவர்கள் தங்களுக்குள் இருக்கும் பிணக்குகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அன்று தான் இந்த அவலங்கள் ஒரு முடிவுக்கு வரும்.

ஆனால் இந்த உயர் ஜாதி வகுப்பினர் இடையே ஒற்றுமையின்மையை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே சில அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் காட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.