பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!

0
59

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!

சமூக பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரி மாதம்,தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு,
பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.மேலும் இந்த இழப்பீடு தொகைக்கு முதல் கட்டமாக ரூ.14.96 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென்றும் அந்த தொகையை கையாள்வதற்கான விதிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.

அவரது கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரையிலான தொகையை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆரம்ப கட்டமாக ரூ.2 கோடியை தற்போது உருவாக்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகைக்கு அரசு வழங்குகியுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவை குறித்து, தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட செயலாளர் எஸ்.மதுமதி அவர்கள் ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாலியல் குற்றங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு தொகை வழங்கப்படுமென்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி மிகக் கடுமையாக பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும்,
குறைவான பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரை வழங்கப்படும்.

கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூபாய் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையும், குறைவான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூபாய் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

மறுவாழ்வு தேவைப்படும் அளவிற்கு மனரீதியாகவும் மற்றும் உடல்ரீதியாகவும் கொடுங்காயம் ஏற்பட்டிருந்தால் ரூபாய் 1லட்சம் முதல் 3 லட்சம் வரையும்,ஆபாச படம் எடுக்கப்பட்டிருந்தால் ரூ 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும் இழப்பீடு வழங்கப்படும்.

உடல் உறுப்புகளை இழந்து 80% நிரந்தர ஊனம் ஆக்கப்பட்டிருந்தால் ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் 40 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்கும் குறைவான அளவில் ஊனம் ஏற்பட்டிருந்தால் 1 லட்சம் முதல் மூன்று லட்சம் வரையிலும்,20 சதவீதத்திற்கு குறைவாக ஊனமாக பட்டிருந்தால் ரூ.1லட்சம் முதல் 2 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துவிட்டால் அக்குழந்தையின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

பாலியல் குற்றத்தினால் கர்ப்பிணியாகபட்ட பெண்களுக்கு ரூ 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலும்,கர்ப்பிணி ஆக்கப்பட்டு கலைக்கப்பட்டு,கர்ப்பமாகும் தன்மையை இழந்து விட்டால் குறைந்தபட்சம் ரூ 2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ 3 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Pavithra