10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!!  

0
272
10 Fantastic Cooking Tips !! Try this !!
10 Fantastic Cooking Tips !! Try this !!

10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!!

தேங்காய் துரவளுடன் ஊர வைத்து  அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பருப்பி செய்தால் பருப்பி சுவையாக இருக்கும்.

முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும்.

ஜவ்வரிசி பாயசம் செய்யும் பொழுது பாலுடன் சிறிதளவு வருத்த கோதுமை மாவு சேர்த்து கலந்து ஊற்றி பாயசம் செய்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

கட்லெட் செய்யும் பொழுது பிரெட் கிராம்ஸ்க்கு பதிலாக அரிசியை வத்ருது பொடி செய்து போடாலாம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் பொழுது சிறிதளவு பைத்தம் பருப்பு மாவு தூவி எண்ணெய்யில் பொரித்தால் சிப்ஸ் மொருமொருப்பக இருந்கும்.

இட்லி பொடி அரைக்கும் பொழுது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அரைத்தால் பொடி ருசியாக இருக்கும் முடி கொட்டுவது சரியாகும்.

இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால் இட்லி பஞ்சு போன்று இருக்கும்.

அரிசி மாவுடன் சிறிதளவு சோளமாவு  சேர்த்து கலந்து தோசை வரத்தால் தோசை ருசியாகவும் மொருமொருப்பகவும் இருக்கும்.

மோர் குழம்பு செய்து இறக்கும் பொழுது சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் குழம்பு ருசியாக இருக்கும்.

பருப்பு வேகவைக்கும் பொழுது சிறிதளவு நெய் ஊற்றி வேக வைத்தால் பருப்பு விரைவில் வேகும் குழம்பில் தனி ருசி கூடும்.

author avatar
CineDesk