குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்!

0
63
1 year imprisonment for parents if children make a mistake! Chinese government's new law!
1 year imprisonment for parents if children make a mistake! Chinese government's new law!

குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்!

வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி நாடியே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் குழந்தைகளை கண்காணிக்க நேரமில்லாமல் அவர்கள் கையிலும் ஏதேனும் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு கொடுக்கும் பொழுது  அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் நல்லவை ,தீயவை இவை இரண்டும்  கலந்தே உள்ளது. இந்த சூழலில் பல குழந்தைகள் தீயவற்றை பார்த்து தவறான பழக்கங்களை சிறுவயதிலேயே கற்றுக் கொள்கின்றனர். நாளடைவில் பெரும் குற்றம் செய்வதற்கும்  அது வழிவகுத்து  விடுகிறது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என்ற சட்டத்தை கொண்டு வந்தனர்.

அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் மிகுந்த கவனத்தை செலுத்த முடியும். அதன்மூலம் சிறார்கள் வளரும்போது குற்றங்கள் இளைக்காதவாரு நடந்துகொள்வர்.அந்த வகையில் சீனா அரசு , தற்போது குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பெற்றோர்களுக்கு சிறார்கள் வளர்ப்பு போன்ற வகுப்புகளும் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.சீனா அரசின் பார்வையில் நல்கல்வி பெற்றிருக்கும் பெறோர்களின் குழந்தைகள் நல்முறையில் வளரும் என்பதே.அதனால் இம்மரியான புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியும். சிறு வயதில் குழந்தைகள் செய்யும் தவறுகளை தடுக்க இது வழி வகுக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் குழந்தைகள் தவறு செய்தால் அவர்களின் பெற்றோருக்கு ஒரு வருட கால சிறை தண்டனையும் ,ஆயிரம் பவுண்ட் வரை அபராதமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். பெற்றோரின் முழு கண்காணிப்பில் பிள்ளைகள் வளர்வதன் மூலம் அவர்கள் மாமனிதராக உருவாகுவர் என்று எண்ணுகின்றனர்.

ஆனால் பிள்ளைகளும் முழு நேரத்தையும் பெற்றோருடன் செலவிடுவதோ இல்லை. சமூகங்களுடன் ,பள்ளி போன்ற இடங்களிலேயே தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.அவ்வழியில் பார்க்கும்பொழுது அவர்கள் பழகும் நோக்கிலேயே அனைத்தும் உள்ளது.அந்த இடங்களில் அவர்கள் குற்றமே செய்திருந்தாலும் பெற்றோர்கள் மத்தியில் அதனை கண்டறிய முடியாது. இந்த புதிய சட்டம் எந்த அளவிற்கு சரியானதாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமூகத்தில் பிள்ளைகள் பழகுவதை பொருத்து ஒருவருக்கொருவர் வேறுபடுவர். அதனால் இதில் பெற்றோர்களின் முழு பங்கையும் அளிப்பது என்பது சந்தேகத்திற்குரியது ஆகும்.