விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொல்லை செய்தால் 1 லட்சம் அபராதம்! வெளிவந்த புதிய திட்டம்! 

0
102
1 lakh fine for harassing employees on holidays! New project out!
1 lakh fine for harassing employees on holidays! New project out!

விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொல்லை செய்தால் 1 லட்சம் அபராதம்! வெளிவந்த புதிய திட்டம்!

இந்த காலகட்டத்தில் ஐடி வேலையில் இருப்பவர்கள் தான் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன ரீதியாக பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு என்று ஒவ்வொரு நிறுவனங்களிலும் கவுன்சிலிங் முறை உள்ளது.

அதுமட்டுமின்றி ஐடி ஊழியர்கள் விடுமுறை நாட்களின் போதும் கூட அவரது உயர் அதிகாரிகள் அவர்களின் விடுமுறை நாட்களை செலவிட விடாமல் தொடர்ந்து அழைப்பு கொடுத்து நிறுவனம் ரீதியாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதனால் பெரும்பாலானோருக்கு விடுமுறை இருந்தும் இல்லாதது போலவே இருப்பதோடு மன அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஐடி நிறுவனமான ட்ரீம் 11 என்ற நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விடுமுறை நாட்களில் உள்ள ஊழியர்களை அவர்களின் டீம் லீடர்கள் அல்லது உயர் அதிகாரிகள் யாரேனும் தொந்தரவு செய்தால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய திட்டத்தால் ஐடி ஊழியர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்ததோடு மனரீதியான அழுத்தம் குறையும் என்று கூறுகின்றனர்.இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கான முக்கிய காரணம் எந்த ஒரு ஐடி நிறுவனமும் ஒரு தனி நபரை சார்ந்து இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனம் கொண்டு வந்த இந்த அபராத திட்டத்தை போல மற்ற நிறுவனங்களும் கொண்டு வர வேண்டும் என்று இதர ஐடி ஊழியர்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.