புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!

0
88

புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.

 

புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். அதேபோல் நாமும் அன்னையின் போற்றிகளை சொல்லி வீட்டிலேயே பூஜை செய்யலாம். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் எதிர்காலத்தை அறிய கூடிய இறைசக்தி உடனே கிடைக்கும்.

 

வீட்டிலேயே இருந்து சிவபெருமானை வணங்கலாம் அல்லது அருகில் இருக்கக்கூடிய சிவபெருமானுடைய கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி, வில்வ இலை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் லட்சுமி கடாட்சம் வீடு தேடி வரும்.

 

புரட்டாசி பௌர்ணமியன்று சிவவழிபாடு காலையில் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவபெருமானை வழிபாடு செய்தால் முற்பிறவி மற்றும் இந்த பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். மாலை நேரத்தில் சிவபெருமான் ஆலய வழிபாடு செய்தால் ஏழேழு பிறவிக்கும் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். அத்துடன் வேண்டிய வரத்தை மற்றும் எண்ணியவற்றை சிவபெருமான் உங்களுக்கு தந்தருளுவார்.

author avatar
Kowsalya