வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யலாம்.! என்னென்ன செய்யக்கூடாது.?

0
135

வெள்ளிக்கிழமை கடவுள் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாகும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நாளும் வெள்ளிக்கிழமை தான்.

இந்த கிழமையில் அம்மனுக்கு பெண்கள் விரதம் இருந்தாள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். சுபகாரியங்கள், திருமண காரியங்கள், தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும், எனவே, துர்க்கை அம்மன் மற்றும் மகாலட்சுமிக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த நாட்களில் நம்மிடமுள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுத்தால், நம்மை விட்டு லட்சுமி சென்றுவிடுவாள் அத்துடன் துர்க்கையின் அருளும் நமக்கு கிடைக்காது.

பெண்கள்செய்யக் கூடாதது,

பெண்கள் காலை எழுந்தவுடன் அடுப்புத் உடைக்கக்கூடாது, வாசலில் புள்ளி வைத்த கோலம் போடக்கூடாது, வெள்ளிக்கிழமை அன்று அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக் கூடாது, அதேபோல், வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது.

ஆண்கள் செய்யக்கூடாதது,

வெள்ளிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. அதேபோல், முகச்சவரம் செய்யக்கூடாது.

இவைகளை பெண்களும் ஆண்களும் கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யாமலிருப்பது நல்லது. இதனால், நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரங்களும் பலன்களும்,

வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு உணவு வணங்கினால் செல்வம் சேரும்.

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் உள்ள தாயாரின் அபிஷேகத்திற்கு பசும்பால் வாங்கித் தந்தால் தனவரவு உண்டாகும். மேலும், பச்சை நிற வளையல் அணிவித்து தாயாரை வழிபட்டு வந்தால் செல்வம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் வீடு முழுக்க சாம்பிராணி புகை போடுவதால், வீட்டில் ஏதேனும் தீய சக்தி இருந்தால் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் அரசமரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பணவரவு உண்டாகும்.

வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை தரிசித்து வந்தால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும் என்றும் திருமணமான பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பதால் தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும் அத்துடன் கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான வழி உண்டாகும் நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

திருமணம் ஆகாத பெண்கள், ஆடி வெள்ளிக் கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

திருமணம் ஆகாத ஆண்கள், ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.