வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இதை கட்டாயம் செய்து பாருங்கள்!!

0
162
#image_title

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இதை கட்டாயம் செய்து பாருங்கள்!!

சமைக்கும்போது உணவின் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடு வதால் வந்தால் நன்மை ஏராளமாக ஏற்படும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உடல் எடை குறையும். ஆய்வு ஒன்றில் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் ஆன்ட்டி பயோட்டிக்காக செயல்படக்கூடியது என்று அறிவித்துள்ளனர். இவ்வளவு சக்தி வாய்ந்த போன் என்னை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதில் என்னென்ன சக்திகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

முதலில் ரத்த அழுத்தம் குணமாகும். நாள்பட்ட ரத்த அழுத்த பிரச்சனை என்னால் அவதிப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டு வர நரம்புகள் பலமடைந்து நரம்பு சுருங்கி விரிவாவது சீராக்கப்படும். இதன் மூலமாக ரத்த அழுத்தம் கட்டப்படும்.

இரண்டாவதாக வயிற்று பிரச்சனை குணமாகும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டினை பச்சையாக சாப்பிட்டு வருகையில் கல்லீரல் சீராக செயல்பட்டு உணவு செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரக்கப்படும். இதன் மூலமாக செரிமானத்திற்கு தேவையான நொதிகள் கிடைத்து செரிமானம் சீராக நடைபெறும். அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

மூன்றாவதாக மன அழுத்தம் கட்டுப்படும். பச்சை பூண்டு மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

நான்கு இதய நோய் வராமல் தடுக்கும். வெறும் வயிற்றில் பச்சை பூண்டு சாப்பிட்டு வருவதில் அதில் இருக்கும் மூலப்பொருட்கள் இதயத்திற்கு நல்ல பலனை கொடுக்கும். இதன் மூலமாக இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

ஐந்து உடலை சுத்தப்படுத்தும். உடலில் நச்சுப்புழுக்கள் இருக்கும் பொழுது தினமும் ஒரு பூண்டை சாப்பிட்டு வருகையில் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி புழுக்களும் வெளியேறிவிடும்.

ஆறாவதாக சுவாச பிரச்சனைகள் குணமாகும். சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான சுவாச பிரச்சனை, நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். பூண்டு பச்சையாக சாப்பிட்டால் அலர்ஜி வரும் என்பவர்கள் வேகவைத்து சாப்பிட்டு வரலாம்.

author avatar
Selvarani