விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 

0
253
#image_title

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 

அஜித் மட்டும் விஜய் போன்ற நடிகர்களுக்கு போட்டியாக வாத்தியாக களமிறங்குகிறார் நடிகர் தனுஷ்.

இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் குமாரின் படங்கள் தான் எப்பொழுதும் தமிழ்நாட்டில் வசூலை வாரி குவிக்கும். இருவருக்கும் டாப் நடிகர்கள் என்ற இமேஜ் உள்ளதோடு அதிக ரசிகர்களும் உள்ளதால் படத்தை எப்படியாவது வெற்றியடைய செய்து விடுகிறார்கள். இதனால் தான் போட்ட பணத்தை விட அதிக வசூலை அவர்களின் படங்கள் வாரி குவிக்கின்றன.

ஆனால் தனுஷிற்கு எந்த படமும் தற்போது சரியான முறையில் வரவேற்பு பெறவில்லை. திருச்சிற்றம்பலம் மட்டும் ஓரளவு மக்களிடையே வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் வாத்தி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.  இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. படம் முழுக்க தெலுங்கு சாயலில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்படும் இந்த படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இருவரும் வெளியிடுகின்றனர்.

கடந்த பொங்கல் அன்று விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்களும் வெளியானது. அதற்கு அடுத்து ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் அது தனுஷ் நடித்த வாத்தி படம் தான். எனவே படத்தை வெற்றியடைய செய்ய 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியீடு செய்ய இருக்கிறார்கள்.

தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். எனவே அங்கிருந்து கொண்டே வாத்தி படத்தின் ரிலீஸ் தொடர்பான வேலைகளை கவனித்து வருகிறார். எனவே தனுஷின் வாத்தி படம் அவருக்கு கை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

மேலும் இதுவரை இல்லாத அளவு அதிகளவு தியேட்டர்களில் படம் வெளியிடப்படுவதால் வசூல் பெரிதாக இருக்கக்கூடும். மேலும் வாத்தி படம் வெளியிடப்படும் சமயங்களில் வேறு எந்த பெரிய நடிகரின் படமும் வெளியிட படாததால் படத்திற்கு  வசூல் சாதனை பாதிப்பு எதுவும் இல்லை.