வயிற்றில் ஏற்படும் கடமுடா சத்தத்தை சரி செய்ய இதோ எளிய வழி!!

0
140
#image_title

வயிற்றில் ஏற்படும் கடமுடா சத்தத்தை சரி செய்ய இதோ எளிய வழி!!

நம் வயிற்றில் அடிக்கடி திடீரென்று கடாமுடா என்று ஒரு விதமான சத்தம் ஏற்படும். இந்த சத்தத்தை குணப்படுத்த அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

இந்த சத்தம் எதனால் ஏற்படுகிறது என்றால் வயிற்றில் வாயு அதாவது கேஸ் உருவாகி வயிற்றில் இருந்து இந்த சத்தம் ஏற்படுகின்றது. அஜீரணக் கோளாறு காரணமாகவும் இந்த சத்தம் ஏற்படும். இதை சரி செய்ய தேவையான மருந்தை எவ்வாறு தயார் செய்வது எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

இதை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* ஓமம்

* வெள்ளைப் பூண்டு

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து அதில் ஒரு செம்பு அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு இதில் இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை பூண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த தண்ணீர் மஞ்சள் நிறமாக வரும் வரை நன்கு கொதிக்க வேண்டும். அதாவது ஓமம் மற்றும் பூண்டுத் துண்டுகள் நன்கு வேகும் வரை இந்த தண்ணீரை கொதிக்க வேண்டும். ஓமம் மற்றும் பூண்டுகள் நன்கு வெந்தால் தான் அதன் சத்துக்கள் தண்ணீரில் இறங்கும்.

 

தண்ணீர் மஞ்சள் நிறமாக வந்தவுடன் இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதை அரை மணி நேரம் வைத்து விட வேண்டும். நன்கு ஆறிய பிறகு இதை வடிகட்டி ஒரு தண்ணீர் பாட்டிலில் இந்த மருந்தை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

 

பிறகு இதை தினமும் இரண்டு மூடி குடிக்க வேண்டும். அல்லது வயிற்றில் இருந்து சத்தம் வரும் பொழுது இந்த மருந்தை குடிக்கலாம். வயிற்றில் இருந்து ஏற்படும் சத்தம் நின்று விடும்.