வந்தது கொரோனா தடுப்பு மாத்திரை ! வாங்க துடிக்கும் அண்டை நாடுகள்!

0
60
Corona vaccine arrives! Neighbors eager to buy!
Corona vaccine arrives! Neighbors eager to buy!

வந்தது கொரோனா தடுப்பு மாத்திரை ! வாங்க துடிக்கும் அண்டை நாடுகள்!

கொரோனா தொற்றானது கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக மக்களை உலுக்கி வாருகிறது.முதலில் சீன நாட்டில் ஆரம்பித்திருந்தாலும் நாளடைவில் அமெரிக்க,பிரான்ஸ்,பிரேசில் போன்ற அனத்து நாடுகளையும் பாதித்தது.முதலில் குறைந்தளவு காணப்பட்ட இந்த தொற்று நாளடைவில் நாடு முழுவதும் பரவி கட்டுக்குள் அடக்க முடியாமல் போனது.தற்போது அனைத்து நாடுகளும் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது,முகக்கவசம் அணிவது மற்றும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்துவது போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர்.

இரு அலைகளை கடந்த நிலையிலும் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா முதல் 5 இடங்களிலேயே காணப்படுகிறது.இந்த தொற்று பரவுவது இன்றளவும் முடிவுக்கு வந்த பாடில்லை.மக்களின் நலன் கருதி அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றனர்.இதுவரை மூன்று வகை கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் மக்கள் அதிகளவு கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசியை உபயோகிக்கின்றனர்.தற்பொழுது இந்தியாவிலும் மக்கள் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கென்று எந்த ஒரு சிறப்பு மாத்திரையும் இன்றளவும்  பயன்படுத்தவில்லை.அந்தவகையில் மெர்க் என்ற நிறுவனம் மால்னுபிராவிர் என்ற பெயரில் கொரோனா தடுப்பு மாத்திரை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.அந்த மாத்திரையை கொரோனா பாதித்வர்கள் சாப்பிட்டால் தொற்றின் பாதிப்பு குறைவதாக சோதனையில் கண்டறிந்துள்ளனர்.அதனால் இந்த கொரோனா தடுப்பு மாத்திரையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி மெர்க் நிறுவனம் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பிக்க இருக்கிறது.

அவ்வாறு அது நடை முறைக்கு வருமாயின் மக்கள் மிகவும் பயனுள்ளதாக காணப்படும்.இதனை அறிந்த இதர நாடுகளும் அமெரிக்காவிடம் இருந்து மாத்திரை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறியுள்ளனர்.அந்தவகையில் அடுத்த ஆண்டுக்குள் 3 லட்சம் மாத்திரைகளை வாங்க உள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.அந்த நாட்டை போலவே தென்கொரிய, தாய்லாந்து, தைவான், மலேசியா,  பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து கொரோனா தடுப்பு மாத்திரையை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.