ரூபாய் நோட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா:? வெளியானது ஆய்வுத்தகவல்!

0
58

ரூபாய் நோட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா:? வெளியானது ஆய்வு தகவல்!

ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள்,ஒருவரிடமிருந்து அறியப்படாத சங்கிலித் தொடராக பலரிடம் சென்று சேருகிறது.இதனால் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களிலிருந்து கொரோனாத் தொற்று பரவுமா என்ற அச்சம் பொதுமக்களிடையேயும், பல வர்த்தக நிறுவனங்கள் இடையேவும் நிலவி வருகிறது.

இந்த அச்சத்தை போக்கும் வகையில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT,மத்திய சுகாதார அமைச்சரான மருத்துவர் ஹர்ஷவர்த்தனிடம் விளக்கமளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

CAIT – யின் கோரிக்கைக்கு இணங்க ஹர்ஷவர்தன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,லக்னோவில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ரூபாய் நோட்டுகளில் வைரஸ் மற்றும் பூஞ்சை,பாக்டீரியா இருக்கின்றதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வின் தகவலில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள்,பாக்டீரியா வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் அதிகம் மாசுபட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஹர்ஷவர்த்தன் அவர்கள் கொரோனவைரஸ் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மூலம் எளிதில் பரவ அதிகம் வாய்ப்பு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.இவரின் இந்த விளக்கமானது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக,CAITஅமைப்பு கூறியுள்ளது.எனவே ரூபாய் நோட்டிலிருந்து நோய் பரவுதலை தடுக்கும் முறையும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று CAIT-யின் தலைவர், பி.சி.பார்ட்டியா மற்றும் CAIT-யின் பொதுச்செயலாளர் பிரவீன் காண்டேல்வால் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Pavithra