முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! 

0
60
Suicide post of a teenager on Facebook! The cause of death was bribery!
Suicide post of a teenager on Facebook! The cause of death was bribery!

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்!

அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர்அதுமட்டுமன்றி மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை அறிந்தும் சில அரசு ஊழியர்கள் தன்னிடம் வரும் மக்களிடம் லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். மக்களும் தங்கள் வேலை ஆக வேண்டும் என்றால் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தற்பொழுது திமுக அரசு ஆட்சி அமர்த்தியதிலிருந்து பல ஊழல்களை கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தது.

அந்தவகையில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் அனைவரையும் அரசு ஊழியர்கள் மேல் கோவம் வர செய்யும் வகையில் உள்ளது. திருவண்ணாமலை ஆரணி அருகே நடுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் தான் பிரபு. இவர் அப்பகுதியில் பூக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் பட்டா மாற்றம் செய்ய அங்குள்ள விஏஓ விடம் நாடியுள்ளார். அந்த விஏஓ பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ10 ஆயிரம் லஞ்சமாக கொடு என்று கேட்டுள்ளார்.இவர் பல இடங்களில் இதற்கான பணத்தை கடனாக கேட்டுள்ளார்.யாரும் தர முன் வரவில்லை.அதுமட்டுமின்றி இவர் அன்றாட வாழ்க்கைக்கு பூக்கடையில் வரும் வருமானம் வைத்து நடத்தி வருகிறார். அதனால் இவருக்கு நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது.

விஏஓ கேட்ட ரூ.10,000 லஞ்சத்தை கொடுக்க முடியாதுத தன் காரணமாக பூக்கடை வியாபாரி பிரபு மன உளைச்சலுக்கு ஆளானார். தனது முகநூல் வலைத்தள பக்கத்தில் விஏஓ லஞ்சம் கேட்டு தன்னால் தர முடியவில்லை அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக பூ வியாபாரி பிரபு தற்கொலை குறித்து அந்த விஏஓ விடம் களம்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சத்தால் ஓர் உயிர் பரிதாபமாக போனதை அடுத்த அப்பகுதியினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் மக்கள் விசாரணையின் முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.