மக்களே விரைந்திடுங்கள்! இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!  

0
89
Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!
Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!

மக்களே விரைந்திடுங்கள்! இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையிலிருந்து கடந்த மக்கள் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.அந்நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு தேவையான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க வில்லை.அதனால் லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.டெல்லி முழுவதும் இடுகாடுகளாகவே காட்சி அளித்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பானது சற்று குறைந்தவுடன் சில தளர்வுளை அமல்படுத்தினார்.அதில் குறிப்பாக குளிர்சாதன வசதி அதாவது ஏசி பயன்படுத்த கூடாது,தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தினார்.

அதனையடுத்து கொரோனா தடுப்பூசி அமலுக்கு வந்தது.அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.முதலில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.அதனையடுத்து தற்பொழுது தொற்று பாதிப்புக்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் பல துறைகளும் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளித்துள்ளனர்.இந்நிலையில் கொரோனா தொற்று பரவும் என்பதால் பேருந்து பயணிகள் ஓர் இருக்கையில் ஒருவர் மட்டும் அமர வேண்டும் என போக்குவரத்து கழகம் கூறியது.அதுமட்டுமின்றி தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் குளிர்சாதன பேருந்துகள் இயங்காமல் இருந்தது.

தற்பொழுது தொற்றின் பாதிப்பு அதிகளவு குறைந்து காணப்படுகிறது.அதனால் 10 ஆம் தேதி முதல் குளிர் சாதன பேருந்துகள் இயங்க அனுமதி அளித்துள்ளனர்.702 குளிர் சாதன பேருந்துகளும் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே இயங்கும் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளது.வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர்.அப்போது அதிகளவு கூட்டம் கூடும்.அதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகமல் அரசு பேருந்துகளில் பயணிக்க இன்று முதலே முன்பதிவு தொடங்கியது.இதனால் மக்கள் சிரமமின்றி பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்க முடியும்.இந்த முன்பதிவினை www.tnstc.in என்ற வலைத்தளத்தின் சென்று முன்பதிவு செய்யலாம்.