மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! 

0
65
People be alert in these 27 places! Rs 5 lakh fine for violating rules
People be alert in these 27 places! Rs 5 lakh fine for violating rules

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் அதை கடந்து பல்வேறு வழிகளில் வெளிவர முயற்சி செய்கின்றனர்.இந்நிலையில் முதல் அலை இந்தியாவிற்கு அதிக அளவு தாக்கத்தை காட்டாவிட்டாலும் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தது.தினசரி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நடந்தது.இதற்கிடையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரானா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதல் கட்டத்தில் மக்கள் போட முன் வராவிட்டாலும் இரண்டாம் கட்டத்தில் அதிகப்படியான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்தனர்.மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகிவிட்டது.இந்நிலையில் மூன்றாவது அலை இரண்டாம் அலையை விட அதிக அளவு தீவிரம் காட்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மூன்றாவது அலையில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே வழி என்றும் கூறுகின்றனர்.

இதற்கிடையே மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அதிகளவு கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்படுகிறது.மூன்றாவது அலை தீவிரம் காட்டும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுவதற்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நேற்று மாட்டுத்தாவணி சந்தையில் அதிகளவு மக்கள் கூட்டம் கூட பட்டதால் தற்காலிகமாக அச்சந்தை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து திருச்சியில் மக்கள் அதிகம் மக்கள் கூடும் 28 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இடங்களில் செல்லும் மக்கள் முக கவசம் அணியாமலும்,அரசு கூறும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நேற்று மட்டும் 916 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத 81 நபர்களுக்கும் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

தற்பொழுது தொற்று அதிகமாக பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை,வடக்குவாசல் தில்லைநாயகம் படித்துறை,அய்யாளம்மன் படித்துறை, கீதபுரம் படித்துறை,ஓடத்துறை படித்துறை,ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேற்கொண்டு தொற்று அதிகமாக பரவும் இடங்கள் தற்காலிகமாக தடை செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.