பிபின் ராவத் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

0
110

மத்திய அரசு சார்பாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வருடம் தோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றது கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை அறிவியல் மற்றும் பொறியியல் பொது விவகாரங்கள் குடிமை சேவை வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த சேவைகளை செய்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ, உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான விருதுகள் சுமார் 128 பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், பிபின் ராவத், சவுகார்ஜானகி உள்ளிட்டோருக்கு இந்த பட்டியலில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது 128 பெயர்கள் கொண்ட பத்ம விருதுகள் பட்டியலில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தைச் சார்ந்த 7 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மவிபூஷன் விருது 4 பேருக்கும், பத்மபூஷன் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 107 பேருக்கும், வழங்கப்பட இருக்கிறது. 128 பேரில் 34 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது, தடுப்பூசி தயாரிப்பாளர் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவாலாவுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ண எல்லா மற்றும் சுசித்ரா எல்லாவுக்கும் பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று அரசியல் பிரிவில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் சிற்பி பாலசுப்பிரமணியன் கலைப்பிரிவில் மகேஷ் புஜண்டரி, சவுகார் ஜானகி, முத்து கண்ணம்மாள், ஏ கே சி நடராஜன், மருத்துவத்திற்காக வீராசாமி ஷ்ரேயா சமூகப் பணிக்காக எஸ் தாமோதரன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூகுள் சிஇஓ வாக பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.