பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?

0
65

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற தலைவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பினை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என, வழக்கை விசாரிக்கும் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

BJP leaders convicted in Babri Masjid demolition case
BJP leaders convicted in Babri Masjid demolition case?

1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் விசாரணையானது கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கால அவகாசம் ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் முடிவடையும் நிலையில் தீர்ப்பினை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இதில் விசாரணையின்போது தாக்கல் செய்யப்படும் ஆதாரங்களை பதிவு செய்வதற்கும், அத்தனை பரிசீலிப்பதற்கும் வீடியோ கான்பரன்சிங் வசதிகளை தர வேண்டும் என சிறப்பு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டது.

இதன் பிறகு ஜூன் மாதம் முதல் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடத்தி வந்த சிறப்பு நீதிமன்றம் வழக்கின் அனைத்து விசாரணைகளையும் முடித்து வைத்தது.

இந்த நிலையில் தீர்ப்பினை வழங்க ஒரு மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

author avatar
Parthipan K