நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்!

0
130

நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்!

 

ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த நாளையும் பிறந்த தேதி நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது தான் நமது வழக்கம். அதன்படி தான் அந்த குழந்தை நடந்து கொள்ளும் என்று கூறுவர். அதற்கு மாற்றாக ஜப்பானில் ரத்தக் குரூப்பின் மூலம் ராசிபலனை கூறி வருகின்றனர். நீங்கள் இந்த குரூப் ரத்தமாக இதோ உங்களுக்கான இன்றைய பலன் என்று தினந்தோறும் மக்களுக்கு கூறு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியை முதன்முதலில் ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் ஃபர்குவா ஹூக்கிசி என்பவர் 1930 ஆம் ஆண்டு ரத்தத்தின் மூலம் ஒருவரின் செயல்பாட்டை கூற முடியும் என்பதை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 1940, 1950 என இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வந்துள்ளது.மேலும் ஜப்பானில் வேலைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுப்பது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை இந்த ரத்த குரூப் வைத்துதான் தெரிவுசெய்யப்படுவர்.இந்த குரூப் ரத்தம் உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற வரையறை இவர்களுக்கு உள்ளது. அதை வைத்துதான் அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

A

A பாசிட்டிவ் ரத்த குரூப் உள்ளவர்கள் மிகவும் பொறுமையுடன் காணப்படுவார்கள்.இவர்களுக்கு மனிதநேயம் அதிகளவு காணப்படும். இவர்களின் குறை என்னவென்றால் அதி விரைவில் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். இவர்கள் ஒரு வேலையும் 100% ஈடுபாட்டை செலுத்தும் பொழுது இவருடன் இருப்பவரும் அதே ஈடுபாட்டை செலுத்த வேண்டும் என்று எண்ணுவார். இந்த குரூப் இரத்த காரர்களிடம் ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். இவர்களால் மல்டி டாஸ்க் செய்ய இயலாது.

 

A-

A நகடிவ் ரத்த குரூப் உள்ளவர்கள் குறைந்த அளவு மனிதாபிமான வர்களாக இருப்பர். அவர் மேலேயே அவரது நம்பிக்கையானது குறைந்து இருக்கும்.இவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பர். இவர்கள் செய்யும் வேலையில் உறுதியாகவும் மற்றும் கடின உழைப்பையும் கொடுப்பர்.இவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியாத மனிதர்களாகவே காணப்படுவர்.

 

B

பாசிடிவ் ரத்த குரூப் உள்ளவர்கள் முடிவுகளை விரைவாக எடுத்து முடிப்பர். தன் செய்யும் வேலையில் தன்னை விட மற்றவர்கள் சிறப்பான வர்களாக விளங்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கடின உழைப்பை கொடுப்பர்.இவர்கள் இளகிய மனசு உடையவர்களாக இருப்பர்.இவர்களுக்கு சுய நலமாக இருக்க தெரியாது. இதனால் பல வகையில் சிரமப்படுவர்.

 

B-

B நகட்டிவ் ரத்த குரூப் உள்ளவர்கள் அதிகளவு கோபப்பட கூடியவர்களாக இருப்பர். மேலும் பொறுப்பற்ற வராகவும் காணப்படுவர்.அவர்கள் என் எந்த எண்ணத்தை எண்ணுகிறார்கள் அதனையே செய்து முடிப்பர். மற்றவர்கள் கூறுவதை சிறிதும் கண்டு கொள்ளமாட்டார். இவர்கள் அனைவரிடமும் மிக நட்பாக பழகுவார்.இவரை சுற்றி இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார். இருப்பினும் இவரிடம் கோபம் அதிகமாக காணப்படுவதால் போரோ பொறுமை இன்றி இருப்பார்.

 

AB

AB ரத்த குரூப் உள்ளவர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம். முடிவெடுப்பதில் அதிக அளவு குழப்பமடைவர். சிறிய நேரத்திலேயே மற்றவருடன் நட்பாக பழகும் திறன் கொண்டவராக இருப்பார். அவரும் பழகும் போதும் தங்களது நெருங்கிய நண்பர்களின் பட்டியலில் சேர்ப்பது கடினம். அவ்வாறு நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் அவரின் பெயர்களை சேர்க்க அவருக்குள்ளே அதிக அளவு தேர்வுகள் எடுப்பார்.இவர்கள் அதி விரைவிலேயே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள்.

 

AB-

AB- ரத்த குரூப் உள்ளவர்கள் சிறிய காரியங்களுக்கு கூட உணர்ச்சிவசப்படாத வராக இருப்பர்.தன்னை ஃபேஷனாக காட்டுவதில் அதிகம் நாட்டம் உள்ளவராக காணப்படுவார்.இவர்கள் யாரையும் மன்னிக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி இவருக்கும் லாபம் இருக்குமாயின் ஒரு வேலையை செய்வார். மேலும் இவருடன் இருக்கும் இவரது நண்பர்களை நன்முறையில் பார்த்துக் கொள்வார்.

O

O பாசிடிவ் ரத்த குரூப் உள்ளவர்கள் மிகவும் நேர்மையாக காணப்படுவர்.இவர்களுக்கு பொய் சொல்வது அறவே பிடிக்காது. அதேபோல பொய் சொல்லுபவர்களையும் இவர்களுக்குப் பிடிக்காது.அதிகளவு உதவி செய்யும் செய்யும் பண்பு உடையவராக இருப்பர்.

 

O_

O நகடிவ் ரத்த குரூப் உள்ளவர்கள் மிகவும் உறுதியான வர்களாக இருப்பர். இவர்கள் பெரும் வாரியாக யாரையும் நம்பமாட்டார்கள். அதுமட்டுமின்றி மற்றவருடன் நெருங்குவதற்கு அதிக அளவு நேரம் எடுத்துக் கொள்வர். இவர்கள் புதிது புதிதாக வேலையை செய்துகொண்டே இருப்பர். இவர்களது காதலானது வெளிப்படையானதாக இருக்காது.

இதை ஜப்பான் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளது.