நாளை முதல் சிலிண்டர்களின் விலை உயர்வா? மக்கள் அதிர்ச்சி !

0
92

நாளை முதல் சிலிண்டர்களின் விலை உயர்வா? மக்கள் அதிர்ச்சி !

விறகு அடுப்பு பயன்பாட்டில் இருந்த நிலையில் இப்போது சிலிண்டர் அடுப்புகள் அந்த இடத்தை பிடித்துள்ளது. நம் முன்னோர்கள் மிகவும் ஆரோகியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் விறகு அடுப்பில் சமைத்து உண்பதே ஆகும்.

ஆனால் இப்போது நாகரிகமாக வாழ்வதாக கருதி அனைவரும் ஆரோக்கியத்தை இழந்து விட்டனர் என்பதே உண்மை. ஆரோக்கியம் என்பது நாம் உணவு பொருளையே சார்ந்தது. அந்த உணவை நாம் விறகு பயன்படுத்தி சமைக்காமல் சிலண்டர் போன்ற பொருளை பயன்படுத்தி வேகமாக சமைத்து சாப்பிடுகிறோம்.

அவ்வாறு சமைப்பதற்கு அத்தியாவசிமான பொருளாக அன்றாட வாழ்வில் சிலண்டர் இடம்பெற்றுள்ளது.முன்பு சிலண்டர்கள் வாங்குவது என்பது மிகவும் எழுமையாக இருந்தது.ஆனால் இப்போது அவை சாமானியர்களுக்க சவாலாக அமைந்துள்ளதை காணலாம்.

முன்பு புதிய சிலிண்டர்கள் வாங்குவதற்கே ரூ 500 தான் செலவு செய்தார்கள்.ஆனால் இப்போது அந்த நிலைமை தலைகிழாக மாறியுள்ளது. இப்போது சிலின்டர்கள் வாங்குவதற்கு டெபாசிட் பணமே  ரூ 1,450ல்  இருந்து 2,200 ஆகா உயர்த்தபட்டுள்ளது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்தியது.

 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையும் உயர்ந்துள்ளது.அவற்றின் டெபாசிட் கட்டணம் ரூ 800 லில் இருந்து ரூ 1500 ஆகா உயர்ந்துள்ளது. இவை அணைத்தும் நாளை முதல் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.