தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!! 

0
67
தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!
தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!

வருடம் தோறும் மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் பிரிவு பி மற்றும் பிரிவு சி என தனி தனி பிரிவுகளுக்கு பணியாளர்களை நியமித்து வரும் பட்சத்தில் இந்த தேர்வு எப்பொழுதும் தமிழ் மற்றும் இந்தி மொழியிலேயே காணப்படும்.

இந்த முறை தமிழ் மொழி உட்பட 13 மாநில மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது 20,000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த தேர்வு எழுதுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். உதவி பிரிவு அலுவலர், மத்திய அரசின் தலைமை செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, ரயில்வே துறை, வெளியுறவு துறை, பாதுகாப்பு துறை என ஒவ்வொரு துறைக்கும் தேர்வு வைத்து பணியாளர்களை நியமிப்பர்.

சி பிரிவு பணியாளர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சி பிரிவில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.

இது அனைத்தும் பொதுப்பணி தேர்வுகள் எனவே இதற்கு அடுத்து ஜூனியர் இன்ஜினியர் தேர்வு,துணை ஆய்வாளர் தேர்வு என அனைத்து தேர்வுகளும் அடுத்தடுத்து நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது 13 மாநில மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படுவதால் மத்திய அரசின் வேலைகள் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் எளிதாக கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் http://ssc.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும்  கூறியுள்ளனர்.