திடீரென ஆய்வு! சரமாரியான கேள்வி? திணறிய கலெக்டர்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

0
156

தெலுங்கானாவில் வெள்ளிக்கிழமையன்று , நேற்று தெலுங்கானா வந்தால் நிர்மலா சீதாராமன் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். அங்கு பணியாற்றிய ஆய்வாளரிடம் சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார்.

 

தெலுங்கானா மாநிலத்தில் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

 

நிதி அமைச்சர் வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் ஃப்ளெக்ஸ் ஏன் இல்லை என்று ஆட்சியரிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். கலெக்டர் ஜித்தேஷ் பிள்ளையிடம், அகற்றப்படாமல், கிழிக்கப்படாமல், பாதிக்கப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகியாக நீங்கள் உறுதி செய வேண்டும் என கூறியுள்ளார்.

 

அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜித்தேஷ் பிள்ளை அவரிடம் ரேஷன் கடையில் மாநில அரசின் பங்கு என்ன? என்று சரமாரியான கேள்விகளை கேட்டு திணறடித்துள்ளார். அதற்கு மாவட்ட ஆட்சியர் ஜித்தேஷ் தவறான என பதில் கூறவே அவருக்கு சரமாரியான கேள்விகள் மறுபடியும் விழுந்துள்ளன. ஒரு மாவட்ட ஆட்சியராக இருந்தும் மத்திய அரசின் ரேஷன் கடைகளில் பங்கு என்ன? என்று என தெரியவில்லையா? என்று கோபமுடன் பேசியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

 

மாநில அரசின் பங்கு என்ன என்று கேட்டதற்கு இது ஒன்றிற்கு மாநில அரசு ரூம் 34 ரூபாயை செலுத்துகிறது என்று தவறான பதிலை கூறியுள்ளார். அதனால் மிகவும் கோபமடைந்த நிர்மலா சீதாராமன் நீங்கள் உங்கள் பதிலை சரியாக கூறியிருக்கிறீர்களா என்று யோசியுங்கள் என்று கூறியுள்ளார். நான் எங்கேயும் செல்ல மாட்டேன் நீங்கள் உங்கள் பதிலை யோசியுங்கள். மாநில அரசு 34 ரூபாய் கிலோவிற்கு கொடுக்கிறதா என்று யோசியுங்கள். மாவட்ட ஆட்சியராக இருந்தும் மாநில அரசு கிலோ ஒன்றுக்கு எவ்வளவு ரூபாய் செலுத்துகிறது என்று தெரியவில்லை என்று கூறுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார். நான் அரை மணி நேரத்தில் மறுபடியும் செய்தியாளர்களை சந்திப்பேன் அப்பொழுது நீங்கள் சரியான பதிலை கூற வேண்டும் என்று கண்டித்து சென்றுள்ளார்.

 

அரிசி மொத்தம் கிலோவிற்கு 35 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது என்று கூறினார். மத்திய அரசின் பங்காக 28 ரூபாயும், மாநில அரசின் பங்காக 6 ரூபாயும், மக்களின் பங்காக 1 ரூபாயும் பெற்று 1 ரூபாய்க்கு மக்களுக்கு ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது என்று பிஜேபி லீடர் ஒருவர் தனது twitter பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

author avatar
Kowsalya