தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை தீவிர ஆலோசனை!

0
69

கொரோனா பாதிப்பு நிலவரங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் வருகிற 30 ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு சில விதிமுறையுடன் தளர்த்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து சமூக விலகல் கடைபிடிக்கமுடியாமல் போனது. இதனால் கொரோனா தீவிரமாக பரவி நோய்த் தொற்று அதிகமானது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தீவிரமான தொற்றும் அதிகமான உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக மாவட்டங்களுக்கு இடையே கட்டுபாட்டை அதிகரிப்பது குறித்து தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்களுடனும் நாளை காலை கொரோனா தொற்று, ஊரடங்கு மற்றும் மேற்கொண்டு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் பள்ளி, கல்லூரி, கோயில், பேருந்து இயக்கம் குறித்தும் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Jayachandiran