செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்!

0
133
செவிலியர்important-information-for-nurses-you-can-choose-the-district-you-want-to-work-in-பணிய
செவிலியர்important-information-for-nurses-you-can-choose-the-district-you-want-to-work-in-பணிய

செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று இருந்தது அதன்  காரணமாக ஒப்பந்த  செவிலியர் பணியில் பலரும் சேர்ந்தனர். அவர்களுடைய கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்த நிலையில் நிரந்தர பணி வேண்டும் என தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மாவட்ட சுகாதார மையம் மூலமாக நிரப்பப்பட உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

பணியாற்ற முன்னுரிமை அளிக்கும் இடங்களாக இரு மாவட்டங்களை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு மாவட்டங்களில் ஏதேனும் ஓர் இடத்தில் பணிவாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3,949 செவிலியர் பணியிடங்கள் 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கின்றது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்காக 100 மதிப்பெண்ணில் தேர்வு வைக்கப்படும் அதில் 40 மதிப்பெண்கள் பெற்றாலே கொரோனா ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 20 மாதம் கொரோனா காலத்தில் பணியாற்றி இருந்தால் மாதத்திற்கு இரண்டு மதிப்பெண் வீதம் மொத்தம் 40 ஆம் மதிப்பெண்கள் செவிலியர்களுக்கு கொடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையல் அதற்கான விண்ணப்பம் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர், தேசிய நல்வாழ் குழும திட்ட இயக்குனர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் காணொலி  முறையில் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணியாற்ற விரும்பும் சொந்த மாவட்டத்தையும் அது இல்லாவிட்டால் முன்னுரிமை அளிக்க வேண்டிய மாவட்டத்தையும் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டது. அதன் அடிப்படையில் அதற்கான வழிகாட்டுதல்களையும் வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
Parthipan K