கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்…

0
34

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்…

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகின்றது. இதையடுத்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சிம்லாவில் சம்மர்ஹில் என்னும் பகுதியில் சின் கோவில் ஒன்று உள்ளது. இந்த சிவன் கோவிலில் இன்று(ஆகஸ்ட்14) காலை 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சிவன் கோவில் கோவில் இடிந்து விழுந்தது.

சிவன் கோவில் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்தது. மேலும் பல பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இடிபாடுகளில் சிக்கியுள்ள பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

உத்ரகாண்ட் மாநிலத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் டேராடூனில் இராணுவ பயிற்சி ஒன்று இடிந்து விழுந்ததாகவும் அந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.