கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு!

0
68
Corona infection kills 1,027 people a day in India! No more full curfew!
Corona infection kills 1,027 people a day in India! No more full curfew!

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு!

கொரோனா தொற்றானது ஓராண்டுகள் கழித்தும் மக்களை விடாமல் துரத்தி தான் வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபயாகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு பல வித கட்டுப்பாடுகளை போட்டனர்.மக்கள் கூட்டம் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும்.திருவிழாக்கள்,மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது.உழவர்சந்தைகளில் சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதித்துள்ளது.இதுபோல பல தடைகளை மாநில அரசு நிறுவியுள்ளது.இவ்வாறு பல கட்டுபாடுகள் நிறுவியும் கொரோனா தொற்று குறைவது சிறிதும் குறைந்த பாடு இல்லை.

அதனால் இன்று மாநில கவர்னர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைக்கூட்டம் மூலம் சந்தித்து பேச உள்ளார்.இந்தியாவில் 24மணி நேரம் கணக்கெடுப்பின் படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 84ஆயிரத்து 372 பேராக உள்ளது.கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையாக 1 கோடியே 38லட்சத்து 73ஆயிரத்து 825 ஆக உள்ளது.இந்தியாவில் ஒர் நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உள்ளது.இதுவரை மொத்தமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1லட்சத்து 72 ஆயிரத்து 085 ஆக உள்ளது.

ஒர் நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.இப்படி அதிகரித்துக் கொண்டே இருந்தால் மக்களின் நிலை மிகவும் கவலை கிடமாக ஆகிவிடும்.இன்று முதல் மகராஷ்டிராவில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதே போல தமிழ்நாட்டுக்கும் போடும் நிலை ஏற்படலாம்.அதுமட்டுமின்றி பிரதமர் மோடி இன்று கவர்னர்களுடன்  நடத்த போகும் ஆலோசனைக்கூட்டத்தில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு போடுவதை குறித்து பேசப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.