ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு மழை!

0
105

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதே போன்று, கடைசியாக நேற்று பங்கேற்ற வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையுடன் நாட்டை உயர்த்தினார்.

இதனால், பதக்கப்பட்டியலில் 68வது இடத்தில் இருந்த இந்தியா, 47வது இடத்திற்கு முன்னேறியது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்று இந்திய வீரர்கள் அசத்தினர். இதுவே, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களைப் பெற்றதாகும்.

இந்நிலையில், பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமமான பிசிசிஐ பரிசுத் தொகைகளை வழங்கி கவுரவித்துள்ளது. அதன்படி

அதாவது தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு மற்றும் ரவிகுமார் தாகியாவுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா 25 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதே போன்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு அந்தந்த மாநிலங்களின் அரசுகள் பரிசுகளை அறிவத்து வருகின்றன. இதனிடையே, அரையிறுதிச் சுற்று சென்று, மிகப்பெரிய அணிகளையெல்லாம் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.