ஒரே ஒரு பொருள் பாத்திரம் கழுவும் சிங்க் அடைப்பு நொடியில் சரியாகும்!

0
66

ஒவ்வொரு முறையும் நாம் பாத்திரம் கழுவும் பொழுது ஏதாவது ஒரு சாப்பிடும் பொருள் உள்ளே சுற்றிக்கொள்ளும் அதனால் நமக்கு அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கும், அதை என்ன செய்வதென்றே புரியாமல் கழட்டிக்கொண்டு மாட்டிக்கொண்டு இருப்போம்.

 

அப்படி நீர் தேங்கி கொண்டே இருந்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகளும் வரும். துர்நாற்றமும் வீசும், எப்படி சரிசெய்யலாம் என்று தவித்துக் கொண்டிருக்கும் மக்களே, இதுதான் உங்களுக்கான தீர்வு. இதற்கு ஒரே ஒரு பொருள் போதும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. காஸ்டிக் சோடா (Gastic Soda)

2. சூடு தண்ணீர்

செய்முறை:

1. பாத்திரம் கழுவும் சிங்கில் நீர் இருந்தால் நீரை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துணி கொண்டு நினைத்து எடுத்தால் முழு நீரையும் வெளியேற்றி விடலாம்.

2. கடைகளில் காஸ்டிக் சோடா என்று வாங்கிக் கொள்ளவும்.

3. இப்பொழுது அந்த சிங்கின் ஓட்டையில் காஸ்டிக் சோடாவை எடுத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டுக் கொள்ளவும். காஸ்டிக் சோடாவை வெறும் கையினால் எடுப்பது மிகவும் ஆபத்தானது, அதனால் அதனை எடுக்கும் பொழுது கையில் கிளவுஸ் அல்லது ஒரு கவரை போட்டுக் கொண்டே எடுங்கள்.

4. இப்பொழுது ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு சொம்பு அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

5. இப்பொழுது இந்த தண்ணீரை காஸ்டிக் சோடா போட்டு வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த சிங்க்கின் மீது ஊற்றவும்.

6. உள்ளே உள்ள கழிவு வெளியே வருவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

7. இனி உங்கள் வீட்டு சிங்க் தண்ணீரை தேக்காது.

author avatar
Kowsalya