ஐம்பொறிகளையும் வலிமை பெற செய்யும் எண்ணெய் குளியல் ! எப்படி ? எப்பொழுது?

0
161

எண்ணெய் குளியல் என்பது நோய்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும். அதை இன்றைய காலகட்டத்தில் எப்படி குளிப்பது என்று மறந்து விட்டனர்.

எண்ணெய் குளியலை விடுத்து தலைக்கு கண்டிஷனர்கள் ஷாம்புகள் என வாங்கி பழக்கப்படுத்தி முடி கொட்டி அது எப்படி மறுபடி வளர்வது என்று அதற்கு தனியான மருத்துவத்தை தேடி அலைந்து வருகின்றனர்.

காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் எண்ணை குளியலை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றொரு வரைமுறை இருக்கிறது. அது படி செய்து வாருங்கள். உங்களுக்கு அற்புதமான பலன் இருக்கிறது.

1. சூரிய உதயத்திற்கு முன் எழுந்து விட வேண்டும்.
2. அவரவர் தேகத்திற்கு ஏற்றவாறு நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. இப்பொழுது தலை முழுவதுமாக நல்லெண்ணெய் கொண்டு தேய்த்துக் கொள்ள வேண்டும்.
4. காதில் இரண்டு துளி விட்டுக் கொள்ளுங்கள். காதில் இரண்டு துளி எண்ணையை விடும் பொழுது தலையில் உள்ள பிணி போகும்.
5. கண்ணில் இரண்டு துளி விடும் பொழுது செவியில் உள்ள பிணி தீரும்.
6. பாதத்தில் சூடு பறக்க தேய்த்து வரும் பொழுது கண்ணில் உள்ள பிணி தீரும்.
7. தலையில் தேய்த்து குளிக்க முழு பிணியும் தீரும்.

இதற்கு நாம் பத்தியமும் இருக்க வேண்டும். மூன்று நாளைக்கு அசைவம் மோர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பகலில் தூங்குவது வெயிலில் திரிவதை தவிர்க்க வேண்டும்.

இந்த எண்ணெய் குளியலை செய்து வரும்பொழுது பித்தம் நீங்கும் தலைவலி நீங்கும்.
ஐம்பொறிகளும் வன்மையடையும்.
தலை முழங்கால் ஆகியவை வலிமை பெறும்.
தலை முடி வளரும்
சொறி சிரங்கு ஆகியவை நீங்கும்.

author avatar
Kowsalya