இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராது! இத செய்யுங்க!

0
200

இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவுப்பொருட்களால் உணவு செரிக்காமல் இருந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றில் புண் ஏற்படுவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது வாய் துர்நாற்றம் அடிக்கின்றது. இதை போக்க எளிமையான மருத்துவம் ஒன்றுதான் பார்க்கப் போகின்றோம்.

வயிற்றுப் புண் மற்றும் அல்சர் போன்ற காரணத்தால் மற்றும் சரியாக மலம் கழிக்காமல் இருந்தால் கூட துர்நாற்றம் வீசுகிறது.

தேவையான பொருட்கள்:

1. புதினா இலைகள்
2. பச்சை கற்பூரம்
3. ஏலக்காய் 1

1. முதலில் 5 புதினா இலைகளை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதை உரலில் போட்டு கொள்ளுங்கள்.
3. இப்பொழுது ஒரு சிறிய கட்டி அளவு பச்சை கற்பூரத்தை அதில் போட்டு கொள்ளவும்.
4. பின் ஏலக்காய் 1 போட்டு கொள்ளவும்.
5. அனைத்து பொருளையும் சிறிய உரலில் போட்டு நன்றாக இடித்து கொள்ளவும்.
6. அதை ஒர் உருண்டை போல் செய்து கொள்ளவும்.
7. அதை இப்பொழுது உங்கள் வாயில் ஓரமாக வைத்து கொள்ளுங்கள்.
8. கொஞ்சம் கொஞ்சமாக மென்று உமிழ் நீரை விழுங்கவும்.
9. இதை போல் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வரவும்.
10. இதை செய்வதற்கு முன் காலையில் எழுந்ததும் ஆயில் புள்ளிங் செய்து வரவும், நல்ல பலன் கிடைக்கும்.

author avatar
Kowsalya