இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

0
135

தமிழகத்தில் நோய்த் தொற்றுப் பாதிப்புகள் சமீப தினங்களாக அதிகரித்து வருகின்றன. அதேபோல புதிய வகை நோய் தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதோடு நோயாளிகள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களும் கூட தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

இதனடிப்படையில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் வருகின்ற பத்தாம் தேதி வரையில் திறக்கப்படாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு திருவிழா என்று அடுத்தடுத்து பண்டிகைகள் பொதுமக்களால் கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், புதிய வகை நோய் பரவலை கட்டுப் படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் மருத்துவ துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு திருவிழா மதுரை சுற்றுவட்டார பகுதிகளிலும், தமிழகம் முழுவதிலும், விமர்சையாக நடத்தப்படும். அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு திருவிழா இந்த வருடம் நடைபெறுமா என்பது சந்தேகத்தில்தான் இருக்கிறது.

இதுவரையில் அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது விமர்சையாக ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது. ஆனால் தற்சமயம் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இந்த சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒருவேளை நோய்த்தொற்று பரவலை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு திருவிழாவை ரத்து செய்து விடுவார்களோ? என்ற பயம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.