இதை ஒருமுறை சாப்பிடுங்க! வறட்டு இருமல் வரவே வராது!

0
93

மழைக்காலம் தொடங்கிவிட்டது, இருமல், சளி, காய்ச்சல் என பல பிரச்சனைகளும் சேர்ந்தே வந்து விடும். இரவு நேரங்களில் தொடர்ந்து வறட்டு இருமல் வந்து கொண்டே இருக்கும். அதனால் தூக்கம் கெட்டு பல பிரச்சனைகள் வரும்.

 

ஒரு சில பேருக்கு வறட்டு இருமல் வந்து கொண்டே இருந்தால் தொடர்ந்து மார்பு வலியும் தொண்டை எரிச்சலும் சேர்ந்தே வந்துவிடும். இப்பொழுது வரட்டு இருமலுக்கான அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்றை பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. வெற்றிலை

2. ஓமம் அரை ஸ்பூன்

3. தேன்

 

 

செய்முறை:

 

1. ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கழுவி கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதியையும் நுனி பகுதியையும் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

2. இப்பொழுது வெற்றிலையின் நடுவே கால் ஸ்பூன் ஓமம், 1 ஸ்பூன் தேன் இரண்டையும் போட்டு நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.

3. இந்த வெற்றிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு நன்றாக மெல்லுங்கள்,

4. உடனே சாப்பிட்டு விழுங்கி விட கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக மென்று முழுங்க வேண்டும்.

5. அதனை மெதுவாக நின்று விழுங்கவும். கடைசி வரும் சக்கயை சாப்பிடலாம் எந்த ஒரு பிரச்சனையும் வராது. பிடிக்க வில்லை எனில் துப்பிவிடலாம்.

 

வறட்டு இருமல் இருக்கும் பொழுது குளிர்ந்த நீர் பருகுவதை அல்லது குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்கவும். தேனில் உள்ள பொருட்கள் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும், அதனால் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெதுவெதுப்பான நீரில் தேனை எடுத்துக் கொள்ளலாம்.

 

author avatar
Kowsalya