இதை எல்லாம் பண்ணுங்க! அப்புறம் பாருங்க! உங்க இரத்த ஓட்டம் எப்படி இருக்குனு!

0
195
#image_title

நமது உடல் இடைவிடாமல் இயங்கும் ஒரு தொழிற்சாலை இன்றே சொல்லலாம். உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் இருந்தால் மட்டுமே நம்முடைய மொத்த உடலும் சீராக இயங்க முடியும்.
நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாக தான் கிடைக்கிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான ரத்த ஓட்டம் சரியாக இயங்கவில்லை எனில் நம் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படும் இத்தகைய பிரச்சினைகளை தவிர்க்க நம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க வேண்டும்.
இதற்கு நல்ல சத்தான உணவு சேர்த்துக் கொள்வதின் மூலம் இத்தகைய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்வது என்பது மிக முக்கியமான ஒன்று.இது போன்ற சில கொள்கைகளை நாம் பின்பற்றும்போது நம் உடலில் ரத்த ஓட்டம் சீரான அளவில் இயங்கும் அத்தகைய ரத்த ஓட்டத்தை அதிகரிக்க பத்து வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம் .

கிரீன் டீ :
கிரீன் டீயில் அதிக அளவு நன்மைகள் உள்ளது அதை நாம் சரியான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்த ஓட்டம் தங்குதடையின்றி ஓட அதில் உள்ள சில அமிலங்கள் உதவுகிறது எனவே தினமும் ஒரு கப் கிரீன் டீ எடுத்துக் கொள்ளலாம்.

இரும்புச் சத்துள்ள உணவுகள்:
சத்துள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
தானியங்கள் பருப்பு வகைகள் கீரைகள் இறைச்சி மற்றும் கிட்னி பீன்ஸ் போன்றவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பூண்டு:
நம் அனைவருக்கும் தெரியும் பூண்டு நம் உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பான் என்று நமக்குத் தெரியும்.
இதை சமையலில் சேர்த்துக் கொண்டால் உணவில் நறுமணமும் சுவையையும் கூட்டும்.

தக்காளி:
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க லைக்கோ பைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் லைகோபைன் ரத்த ஓட்டத்தை சீராக்கி நம்மை சீராக இயங்க வைக்கும்.

நட்ஸ்:
வைட்டமின் பி3 உள்ள பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வைக்கும்.

மிளகு:
மிளகில் அதிக மருத்துவ குணம் உள்ளது. இவை உணவு பொருட்கள் கார சுவைக்காக நாம் சேர்க்கிறோம் இதனால் நம் உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதனை அன்றாடம் ஒரு உணவுடன் சேர்த்துக் கொண்டால் ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்லும்.

டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள் பல பேருக்கு தெரியாது இந்த டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன.

உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வது என்பது நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உதாரணமாக சைக்கிளிங், ரன்னிங் ,வாக்கிங், எக்சர்சைஸ் போன்ற ஏதாவது ஒரு

author avatar
Kowsalya